இசை குறித்து இஸ்லாம்

                         بسم الله الرحمن الرحيم  

       இசை ஆன்மாவின் அழிவாகும்


الحمد لله والصلاة والسلام على رسول الله(صلى الله عليه و سلم ) اما بعد...

இன்றைய நாட்களில் வீடுகள், கடைவீதிகள், பயணங்கள் என அனைத்து இடங்களும் இசை மற்றும் பாடல் கருவிகளால் நிரம்பி வழிகின்றன .


கணினி, இணையதளம், செல்ஃபோன், இதர தகவல் பரிமாற்று சாதனங்கள் ஆகியவை நமது வாழ்க்கைக்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில்  சமூகத்தில் இந்த கருவிகள் ஷைத்தானின் அழைப்பாக இருக்கும் இசைப்பாடல்களுக்காக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதுதான்.


ஆண்கள், பெண்கள் ஏன் சிறுவர்கள் கூட இந்த ஷைத்தானிய ஓசையின் பிரியர்களாக இருக்கிறாரர்கள்.


ஆடியோ மற்றும் வீடியோ பாடல்களை ஒலிக்கவும் காட்சியகப்படுத்தவும் நூற்றுக்கணக்கான புத்தம்புதிய கருவிகள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டும்  ஆரவாரமாக அவைகள் விற்பனையாகிக் கொண்டும் இருக்கிறது.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغيرعلم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين (لقمن -6)  

பொருள் :

 மக்களில் சிலர் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழி கெடுப்பதற்க்காக  (அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்யும்) வீணான செய்திகளை விலைக்கு வாங்குகிறார்கள் .  (அல்லாஹ்வின் வசனங்களாகிய) அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர் . இத்தகையோர்க்கு இழிவு தரும் வேதனை உண்டு.



திருக்குர்ஆனுடன் போர்:

புனித மக்காவில் நள்ர் பின் ஹாரிஸ் என்ற  காஃபிரான வியாபாரி   மார்க்கத்தை விட்டும் திருக்குர்ஆனை விட்டும் மக்களை தடுப்பதற்காக ஈரான் நாட்டு அரசர்களின் கதை சொல்பவர்களையும் , பாட்டுப்பாடக்கூடிய இளம் பெண் ஒருவளையும் மக்களை சத்தியத்தை விட்டு திருப்புவதற்காக விலைக்கு வாங்கி வந்தான்.

(இவன் சம்மந்தமாகவே இந்த திரு வசனம் இறங்கியது)


இந்த சம்பவத்தின் மூலமாக இசையும் பாடலும் மார்கத்திற்கும் திருக்குர்ஆனிற்கும் எதிரானவர்களின் தொழில் என்றும் அதனால் இழிவை உண்டாக்கும் வேதனை ஏற்படும்  என்ற கடினமான எச்சரிக்கை உள்ளது என்பதும் தெரிகிறது..!


கடுமையான தண்டனை

1)யார் பாட்டு பாடும் பெண்ணிடம் அமர்ந்து பாட்டு கேட்பானோ கியாமத் நாளில்  அவனது காதில் அல்லாஹ் ஈயத்தை (காய்ச்சி) உருக்கி ஊற்றுவான்..!

(المعجم الكبير للطبراني ح: 11960 اسناده حسن)


2)எப்படி தண்ணீர் விளைச்சலை முளைபிக்கிறதோ அவ்வாறு பாடல் உள்ளத்தில் நயவஞ்சகத்தை முளைப்பிக்கிறது...!

(شعب الايمان  رقم الحديث: 22218  اسناده  ضعيف)


3)அல்லாஹ் இசைக்கருவிகளை உடைப்பதற்க்கு எனக்கு கட்டளையிட்டுள்ளான் என்று ஒரு ஹதீஸில் வந்துள்ளது...!


(مسند  احمد  رقم  الحديث   22218 اسناده  ضعيف)


4) மற்றொரு ஹதீஸில் சந்தோஷத்தின் சமயத்தில் ஏற்படுத்தப்படும் இசை பாடலின் சப்தமும் சிரமத்தின் சமயத்தில் ஒப்பாரியின் சப்தமும் சபிக்கப்பட்டுள்ளது.


(مسند احمد  رقم الحديث:  7513  اسناده  صحيح)


குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்படுதல் 


ஒரு ஹதீஸின் கருத்தாவது ...! சில மக்களை மது அருந்துவதினாலும்  பாட்டுபாடும் பெண்களின் ( இசைப்) பாடல்களை கேட்கும் துர்காரியத்தினாலும் அல்லாஹ் அவர்களை பூமியில் புதையுரச்செய்வான், அவர்களில் வேறு சிலரை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிடுவான்..!


(سنن  ابن  ماجه  باب  العقوبات   رقم  الحديث: 4021  اسناده  حسن  لغيره)


அல்லாஹ்வின் தண்டனைக்கு அழைப்பு விடுத்தல் 

ஷைத்தானிய அழைப்பான இசை அதிகமாகுவது அல்லாஹ்வின் தண்டனைக்கு அழைப்பு விடுவதாகும் . 

இதனால் ஒவ்வொரு வீட்டிலும் சண்டை சச்சரவுகள், குழந்தைகள் பெற்றோர்களுக்கு கட்டுபடாமல் (சீர்கெட்டு) போவது, (பல வகையான) நோய்கள் ஏற்படுவது, வாழ்வாதாரத்தில் நெருக்கடி ஏற்படுவது, குடும்பத்தில் குழப்பம்  , இன்னும் வானம் பூமியை பிளக்கும் அளவு பல்வகையான பேரிடர்களும் வேதனைகளும் நம்மை சூழ்ந்துவிட்டன. 


ஆனால் வருத்தமென்னவெனில் இசை இவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்திய போதிலும் ,  அது அழிவை ஏற்படுத்தும் ஒரு வகை போதையாக உள்ள போதிலும் அது நமது ஆன்மாவில் கலந்து விட்ட பெருந்நோயாக ஆகிவிட்டது...!



உருது மூலம்  : முஹம்மது ஹஸன் லாஹூர் (حفظه)


தமிழ் : முஹம்மத் ஹுஸைன் அல் ஹஸனி

Comments

  1. Mashaallah

    تقبل الله منا ومنكم صالح الأعمال
    اخك الفقير محمد ارشاد

    ReplyDelete

Post a Comment